சவுக்கு தளத்தை பற்றி எத்தனை பேருக்கு அவர் கைது செய்யப்படுவதற்கு முன் தெரியும் என்று தெரியவில்லை. ஆனால் அந்த தளம் பல நாட்களுக்கு முன்னரே நமது கவனத்துக்கு வந்தது. அதில் பல கட்சியினரையும் பற்றி விமர்சித்து இருக்கிறார்கள். நிஜமாகவே பக்கச் சார்பற்றவர்களோ என்று எண்ண விழையும் போது தான் சில இடுகைகள் கண்ணில்பட்டது. அதை வாசித்த பின் தான் சவுக்கை பற்றிய இந்த டவுட்டு வந்தது
சவுக்கு தளத்துக்கும் நக்கீரனுக்கும் அப்படி என்ன தான் பிரச்சினை என்று தெரியவில்லை. எதைப் பற்றி எழுதினாலும் நக்கீரனை சுற்றி சுற்றியே எழுதுகிறார்கள். அந்த தளத்தை சமீபத்தில் பார்வையிடும் வாய்ப்பு கிட்டவில்லை. முடிந்தால் அந்த தளத்தை சென்று பார்வையிட்டு நீங்களே இந்த டவுட்டை கிளியர் செய்து கொள்ளுங்கள்
நித்யானந்தா விவகாரம் வெடித்த போது எல்லா பத்திரிக்கைகளுமே அதை வைத்து கல்லா கட்டினார்கள். வலையுலகிலும் பலர் அதை வைத்து கும்மி அடித்தார்கள். அதில் முக்கியமான ஒரு கும்மி டுபாக்கூர் தமிழனுடையது. நித்யானந்தா எபிசோட் பற்றி அவர் எழுதும் போது. நித்யானந்தா லீலைகள் அடங்கிய சிடிகள் பல பத்திரிக்கைகளுக்கும் யாரோ ஒரு அனானியால் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அதை வெளியிட பல பத்திரிக்கைகளும் தயங்கிய வேளையில் சன் டிவி முந்திக் கொண்டதாகவும் அதை தொடர்ந்து நக்கீரனும் அதை வெளியிட்டதாகவும் டுபாக்கூர் தமிழன் தன் தளத்தில் குறிப்பிட்டு இருந்தார், இதை தவிர அதில் வேறு ஏதேனும் அவர் குறிப்பிடவில்லை
இதே விஷயத்தை சவுக்கு தனது தளத்தில் விவரிக்கும் போது நித்யானந்தா சிடி சன் டிவிக்கு மட்டுமே கிடைத்ததாகவும் பின்னர் சன்னும் நக்கீரன் ஏதோ டீலிங் போட்டு நக்கீரன் தனது வலைப்பக்கத்தில் அதை வெளியிட்டதாகவும் விவரித்து இருக்கிறது. சவுக்கின் இந்த ரிப்போர்ட்டை பற்றி டுபாக்கூர் தமிழன் என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை
ஒரே விஷயத்தை பற்றி இரு தரப்பினர் இருவேறு விதமாக எழுதி இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக சவுக்கு எல்லா விஷயங்களையுமே நக்கீரனை தொடர்புபடுத்தி எழுதிவருவது சவுக்கு தளத்துக்கு நக்கீரன் மீது ஏதோ காழ்ப்புணர்வு இருப்பது மிகவும் வெளிப்படையாக தெரிகிறது
சவுக்கு கைதுக்கு பின்னால் ஏதோ பத்திரிக்கை அரசியல் இருக்கிறது அதனால் தான் அவர் ஏதோ ஒரு காரணத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். இவை எல்லாவற்றையும் மறந்து அல்லது மறைத்து சவுக்கு தளத்தை சுற்றி புனித பிம்பம் கட்ட முயல்பவர்களின் கபடத்தனம் மிகவும் கண்கூடாக தெரிகிறது

13 comments:
நக்கீரன் போன்ற ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்கு வக்காலத்து வாங்கும் போதே உங்களின் லட்சணம் தெரிகிறது.
மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஏதாவது ஒரு செய்தியோ அல்லது புலனாய்வு கட்டுரையோ அந்த பத்திரிகையில் வந்ததுண்டா?
கீழ்த்தரமான "செக்ஸ்" சம்பத்தப்பட்ட செய்திகளே அந்த பத்திரிகையில் அதிகம். நக்கீரனுக்கும் , "விருந்து" பத்திரிக்கையும் என்னைப்பொறுத்த வரையில் எந்த வித்தியாசமும் இல்லை.
Kumar - London
//அதிலும் குறிப்பாக சவுக்கு எல்லா விஷயங்களையுமே நக்கீரனை தொடர்புபடுத்தி எழுதிவருவது சவுக்கு தளத்துக்கு நக்கீரன் மீது ஏதோ காழ்ப்புணர்வு இருப்பது மிகவும் வெளிப்படையாக தெரிகிறது//
அப்படியே இருந்தாலும் கூட நக்கீரன் கோபால் தமிழக முதல்வர் இல்லையே, சவுக்கை கைது செய்யச் சொல்லும் அளவுக்கு தனது எதிரியை பலிவாங்கத் துடிப்பது நக்கீரன் போன்ற செய்தி இதழ்களுக்கு அழகு இல்லை. நக்கீரன் கோஷ்டி ஜெவிடம் பட்டப்பாட்டை சவுக்குக்கு செய்து பார்பது பத்திரிக்கை அதர்மம்
முதலில் பிணையில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு அது இதென்று அடித்துவிட்டார்கல். ஆனால் அது மிகச் சிறிய வழக்குதான். இரண்டே நாட்களில் பிணை கிடைத்தும்விட்டது.
முதலில் இந்த வழக்கிற்கும் அவர் எழுதியதற்கும்கூட ஏதாவது தொடர்புண்டா என்பதுகூட உறுதியாகத் தெரியவில்லை.
நக்கீரனை விடுங்கள்.. மற்றபடி உளவுத்துறை ஐ.ஜி பற்றி இவ்வளவு வெளிப்படையான தகவல்கள் வெளியிடுகிறார்கள்.. அதற்கு உங்கள் பதில் என்ன..\?
அரசு நிலங்களை இப்படி அதிகார வர்க்கங்கள் பங்கு போட்டு அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டி விற்பதை நியாயபடுத்துகிறீர்களா?
//ஆனால் அது மிகச் சிறிய வழக்குதான். /// ஆனால் அது மிகச் சிறிய பொய் வழக்குதான். சவுக்கு யாராக இருந்தால் உங்களுக்கு என்ன? அரசதிகாரிகளை பற்றி எழுதினாலே கைது செய்துவிடலாமா? அவரவரைப் பொறுத்து 'சவுக்கு கைது' சரியா தவறா என்று கூறிவிட்டு பிறகு அவரைப்பற்றி விமர்சனம் வைக்கலாமே!! உங்களைத் தடுப்பது எது? ஏன்யா அடிச்சே என்று கேட்டால் மெதுவாத்தானே அடிச்சேன் என்பது என்ன விதமான பதில்?
மோகன் கந்தசாமி! நீங்கள் ஜ்யோவ்ராம் சுந்தரின் விளக்கத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். "ஏன் அடிச்ச?" என்று யாரும் கேட்ட மாதிரி தெரியவில்லை. எல்லோரும் சேர்ந்து கையை உடைத்துவிட்டதாகவே பரப்புரை செய்கிறார்கள். அதனால் தான் சுந்தர் அப்படி எல்லாம் இல்லை என்று சொல்கிறார்
சுந்தர்! உங்கள் விளக்கத்துக்கு மிக்க நன்றி
முதல் கமெண்டு போட்ட அனானி! உங்கள் கூற்றுப்படி நக்கீரன் மஞ்சள் பத்திரிக்கையாகவே இருந்துவிட்டு போகட்டும் சவுக்கு ஏன் மஞ்சள் பத்திரிக்கையையே குறிவைத்து எழுதுகிறது அப்படிப்பட்ட சவுக்கிற்கு ஏன் இப்படிப்பட்ட பிம்பம் எழுப்பப்படுகிறது
கோவியார்! உங்களை மீண்டும் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. தமிழக முதல்வரை பழித்தவரை தான் கைது செய்ய வேண்டுமென்றால்...நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். மேலும் அச்சு ஊடகங்களை விட அதிகமாக இணையத்தில் அவதூறு பரப்ப முடியும் என்பது வலைப்பதிவர்களுக்கு நன்றாக தெரியுமே
ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் மோகன் கந்தசாமிக்கும் நடுவே கமெண்டு போட்ட அனானி, சவுக்கு சாடி இருக்கும் அரசு அதிகாரிகளும் கூட நக்கீரனுடன் தொடர்பு உள்ளவர்களாகவே இருக்கிறார்களே. அப்படி என்றால் மற்ற அதிகாரிகள் எல்லாம் சவுக்கை என்னும் ரமணாவை பார்த்து பயந்து ஊழல் செய்வதையே விட்டுவிட்டார்கள???
வலையுலக நீதிபதிகளுக்கு சவுக்கு ஒரு பிரச்சனையில்லை.திமுகவை அடிக்க ஒரு தடி கிடைத்த மகிழ்ச்சி தான்.
சரியா சொன்னீங்க சின்னச்சாமி
//ஜ்யோவ்ராம் சுந்தருக்கும் மோகன் கந்தசாமிக்கும் நடுவே கமெண்டு போட்ட அனானி//
:-))) உடன்பிறப்பு எப்படி எல்லாம் க்ளு கொடுக்கறீங்க!
வருகைக்கு நன்றி கிரி! அனானியை அடையாளப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது
Post a Comment