பிரியாணி பொட்டலம் 21.04.2010

நம்ம தலைவர் செய்யுற சில விஷயங்கள் ஏன் செய்கிறார் எதற்கு செய்கிறார் என்று நமக்கு முதலில் புரியாவிட்டாலும் பின்னர் அதற்கு வரும் எதிரிவினைகளை பார்க்கும் போது இதெல்லாம் தெரிந்தே தான் தலைவர் செய்கிறாரோ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. தமிழ்ப் புத்தாண்டை தலைவர் தை மாதத்திற்கு மாற்றினாலும் மாற்றினார் அதற்கு வரும் எதிரிவினைகளை கொஞ்சம் யோசித்து பார்த்தால் இதுவும் தலைவரின் ஒரு உபாயமோ என்று எண்ணத் தோன்றுகிறது

விவேக் ஒரு படத்தில் சொல்லுவார், இரண்டு மலையாளிகள் வெளிநாட்டில் சந்தித்துக் கொண்டால் கூட அவர்கள் தாய்மொழியான மலையாளத்தில் தான் பேசிக் கொள்வார்கள் ஆனால் தமிழனோ தமிழ்நாட்டிலேயே சந்தித்துக் கொண்டால் கூட ஆங்கிலத்திலோ அல்லது வேறு மொழியிலோ தான் பேசுவான் என்பார். தமிழனின் மொழிப்பற்று அந்த அளவுக்கு தான் இருக்கிறது. பொங்கலை கூட சங்கராந்தியாக்க நினைப்பவன். அப்பேர்பட்ட தமிழன் திடீரென்று தமிழ் உணர்வு வந்து சித்திரை திங்கள் தொடங்கிய போது மாங்கு மாங்கு என்று தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கிறான் என்றால் தமிழனுக்கு இது மாதிரி ஏதாவது செய்தால் தான் தமிழுணர்வு வரும் என்று தெரிகிறது

டுபாக்கூர் தமிழர் என்று எணைய பேரெலி ஒருவர் அவ்வப்போது தன் இணைய தளத்தில் ஏதாவது புரட்டு கருத்துகளை அவிழ்த்துவிடுவார். அதில் கலைஞரை தவறாமல் காய்ச்சுவதோடு நிற்காமல் பொரட்சித் தலைவிக்கும் தவறாமல் காவடி தூக்குவார். அவர் சமீபத்தில் எழுதிய இடுகை ஒன்றில் மேல்சபை குறித்து தனது அரைவேக்காட்டு அறிவை அள்ளி கொட்டி இருக்கிறார். மேல்சபை இருப்பதை கழகம் எப்போதும் ஆதரித்தே வந்து இருக்கிறது என்பதை கழகத்தை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். மேல்சபையை எம்.ஜி.ஆர் கலைத்த போதும் அவர் மறைவிற்கு பின் அமைந்த கழக ஆட்சிகளிலும் மேல்சபையை மீண்டும் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு எழுதும் டுபாக்கூர் தமிழர் மற்றவர்களை பார்த்து பொய்யர்கள் என்று எழுதும் அளவிற்கு தகுதி பெற்றுவிட்டார். ஓசியில் பிளாக் கிடைத்துவிட்டது என்பதற்காக கைக்கு வந்ததை எல்லாம் கிறுக்கித் தள்ளும் இது போன்ற டுபாக்கூர் பார்ட்டிகளே இவ்வளவு அரசியல் பண்ணும் போது தலைவர் எவ்வளவு அரசியல் பண்ணுவார்

இறுதியாக, டோண்டு என்பவர் ஏதோ எழுதிவிட்டார் என்று சொல்லி பலர் அவர் மீது காண்டு ஆக இருக்கிறார்கள். அந்த இடுகையை டோண்டு என்பவர் எழுதும் முன்னர் அவர் மீது மரியாதை வேறு வைத்து இருந்தார்களாம். இவர்கள் புதிய பதிவர்கள் போல் தெரிகிறது ஆனால் நமக்கு தான் டோண்டு பற்றியும் அவரின் விளம்பர வெறியும் நன்றாக தெரியுமே. தமிழ் பதிவுலகம் அடுத்த கட்டத்திற்கு போகிறதோ இல்லையோ இந்த டோண்டு போன்றவர்களால் முந்தைய கட்டத்துக்கு இன்னமும் போகாமல் இருப்பதே பெரிய விஷயம்

11 comments:

கிரி said...

உடன்பிறப்பு தலைப்பு பொருத்தமா வைத்து இருக்கீங்க! :-)))

உடன்பிறப்பு said...

வருகைக்கு மிகவும் நன்றி கிரி

யுவகிருஷ்ணா said...

பின்னுறீங்க உடன்பிறப்பு :-)

உடன்பிறப்பு said...

உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றி தோழர் யுவகிருஷ்ணா

ஷாகுல் said...

என்னங்க ரொம்ப நாளா ஆளையே கானோம்.

Anonymous said...

வீடு வாடகைக்காக நெட்டிலும், ரோட்டிலும் சமீபமாய் அலைந்தேன். பல இடங்களில் பிராமின்ஸ் ஒன்லி என்று சொல்கிறார்கள். நெட்டிலும் அதே நிலைதான். இது மற்றவர்களைக் கேவலப்படுத்துவது போல இல்லையா? வேண்டுமானால் வெஜிடேரியன் ஒன்லி என்று போட்டுக் கொள்ளலாமே? அது தவறாகத் தெரிவதில்லை. இதைப் போல் மற்றவர்கள் போட்டால் என்ன ஆகும் என்று இவர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும். பிராமணாள் ஓட்டல்களை தார் வைத்து அழித்த தி.க.வினர்தான் இதற்கும் ஏதாவது பண்ண வேண்டும். வெள்ளையர்கள் ஓட்டல்களில் "கறுப்பர்களும், நாய்களும் உள்ளே வரக் கூடாது" என்று எழுதி வைத்தார்களாம். அதைப் போல இது இருக்கிறது. திருமாவளவன் ஏன் இதைக் கண்டு கொள்ளவில்லை? இது ரொம்ப காலமாக நடக்கிறது. மற்ற எல்லோரும் பிராமினைத் தவிர என்று போட்டுக் கொண்டால் இவர்கள் கதி? சமூகத்தோடு ஏன் ஒத்துப் போக மறுக்கிறார்கள்? இது அவர்கள் தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப் போடும் முயற்சி என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த சில காரணங்களால்தான் மீண்டும் ஜெயலலிதா வரவே கூடாது என்று தோன்றுகிறது. வந்தால் இவர்களைக கையில் பிடிக்க முடியாது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஆஹா..உடன் பிறப்பு இடுகையைப் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு...நல்ல இடுகை

உடன்பிறப்பு said...

வருகைக்கு நன்றி ஷாகுல், ரொம்ப பிசிங்க ஏதாச்சும் இது மாதிரி சமயங்களில் தான் தலை காட்ட முடிகிறது

உடன்பிறப்பு said...

வருகைக்கு நன்றி அனானி

உடன்பிறப்பு said...

வருகைக்கு நன்றி tvr ஐயா, உங்கள் அவசர அறிவிப்பு வாசித்தேன் மிகவும் நன்றாக இருந்தது

அதிஷா said...

வருகைக்கு நன்றி உடன்பிறப்பு