ஜெயலலிதா உண்ணாவிரத காட்சிகள்

படத்தை கிளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்



ஜெயலலிதா உண்ணாவிரதம் என்றாலே அந்த ஏரியா டாஸ்மாக் கடைகளுக்கும் பிரியாணி கடைகளுக்கும் ஏக கொண்டாட்டம் தான். கடந்த முறை அம்மையார் உண்ணாவிரதம் இருந்த போது எடுத்த் படங்கள் தான் இவை. இந்த முறை இதே மாதிரி தான் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. படங்கள் வந்தவுடன் அவற்றையும் பிரசுரித்துவிடலாம்

தொண்டர்கள் உறங்கும் படத்துக்கு கீழே இருக்கும் கருத்தை கவனிக்கவும்

ஜெயலலிதாவின் கேரவன் உண்ணாவிரதம்

ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்றாலே ஏனோ கேரவனும் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடிவதில்லை. எப்போதும் தமிழர்கள் நலனை பற்றியே சிந்தித்து கொண்டிருக்கும் ஜெயலலிதா காவிரி பிரச்சினைக்காக உண்ணாவிரதம் இருந்து இடையிடையே கேரவனுக்குள் போய் ஓய்வு எடுத்துவிட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. அப்படி என்ன தான் அந்த கேரவனில் இருக்கிறது என்று தேடியதில் கிடைத்தது



படத்தில் காணப்படும் கேரவன் இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்காக தயாராகி வருகிறது. அரசியலில் குதித்து இருக்கும் சஞ்சய்தத் தனது தேர்தல் பணிக்காக தயார்படுத்தி வருவது தான் இந்த கேரவன். இதில் பல சொகுசு வசதிகளும் இருக்கின்றனவாம். இதன் மதிப்பு அதிகம் இல்லை ஜென்டில்மேன் வெறும் 3 கோடிகள் மட்டும் தான்

சஞ்சய்தத் கேரவனே இப்படின்னா...