கலைஞரை எதிர்க்கும் கயவர் கூட்டம் எப்போதும் சொல்லும் ஒரு குற்றச்சாட்டு கலைஞர் சிறுபான்மை ஓட்டு வங்கியை வைத்து அரசியல் நடத்துகிறார் என்பது. இப்படி சொல்லி சொல்லியே இந்த கயவர் கூட்டத்டுக்கு "மைனாரிட்டி" என்ற சொல்லை கேட்டாலே ஏதோ வேப்பங்காய் போல கசக்கும். இப்படிப்பட்ட நேரத்தில் இவர்களுக்கும் "மைனாரிட்டி" என்ற சொல் தேனாய் இனிக்கத் தொடங்கியது எப்பொது இருந்து தெரியுமா? அனுதினமும் அம்மையார் அளித்துவரும் அறிக்கைகளில் "மைனாரிட்டி" தி.மு.க. அரசு என்று குறிப்பிடுவாரே அப்போது இருந்து. இப்படி "மைனாரிட்டி" என்ற சொல்லை வைத்து அரசியல் செய்யும் இவர்களுக்கு கலைஞரை குறை கூற என்ன தகுதி இருக்கும்
ஆஸ்கர் விருது பெற்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானை "சிறுபான்மை இனத்து செல்வம்" என்று அவர் வாழ்த்திவிட்டாராம் உடனே கிளம்பிவிட்டார்கள் கலைஞர் சிறுபான்மை அரசியல் நடத்துகிறார் என்று. அட ஞானசூன்யங்களா அவர் ஒரு ரைமிங்க்காக சொன்னதைக் கூட புரிந்து கொள்ள முடியவில்லை அதற்கு அவரை விமர்சனம் செய்ய வந்துவிட்டீர்கள். அப்படியே நீங்கள் சொல்வது போல் வைத்து கொண்டாலும், இத்தனை நாள் "முஸ்லிம் தீவிரவாதி" என்று உங்கள் பத்திரிக்கைகளில் எல்லாம் எழுதி வந்தார்களே அப்போது எங்கே போயிற்று உங்கள் யோகியதை. தீவிரவாதத்துக்கு மதச் சாயம் பூசினீர்களே மாலேகான் குண்டு வெடிப்பு நடக்கும் வரை. மாலேகானில் இந்து சாமியாரினி கைது செய்யப்படும் வரைக்கும் தீவிரவாதத்துக்கு நீங்கள் பூசாத மதச் சாயத்தையா இன்று கலைஞர் பூசிவிட்டார்
ரஹ்மான் என்ற ஒரு இசைக் கலைஞரை (இங்கேயும் கலைஞர்!!) எந்த (மத) வட்டத்துக்குள்ளும் அடைக்க வேண்டாம் என்று மெஜாரிட்டியாக நினைக்கும் மக்களில் நானும் ஒருவன். ஆனால் இன்று சொல்கிறேன் வருங்காலத்தில் சோ ராமசாமியையும் இதே மாதிரி எந்த (ஜாதி) வட்டத்துக்குள்ளும் அடைக்க வேண்டாம் அவர் ஒரு தேசபக்தர் என்று இதே கூட்டம் நாளை சொல்லும். ஆனால் சோ ராமசாமி தன் ஜாதியை தவிர வேறு எதற்கும் கவலைப்படாதவர் என்பது நமக்கெல்லம் தெரியும் வரும் சந்ததிக்கு எப்படி தெரியும்
Pages
ஏ.ஆர்.ரஹ்மான் சிறுபான்மையினரா?
டாக்டர் ராமதாசின் புதிய ஞானோதயம்
ராஜிவ் காந்தி உயிருடன் இருந்திருந்தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும் என்ற புதிய ஞானோதயம் வந்திருக்கிறது டாக்டர் ராமதாசுக்கு. நாம் ஏற்கனவே சொல்லியபடி ஈழ விஷயத்தில் தமிழக அரசியல்வாதிகளில் எந்த ஒரு தலைவருமே நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. அப்ப்டி இருக்கும் போது ஒரே தலைவரை மட்டும் கும்மோ கும்மி வருவது எங்கே தன்னுடைய குட்டு எல்லாம் வெளிப்பட்டு விடுமோ என்கிற பச்சை சுயநல் அரசியலை தவிர வேறு என்னவாக இருக்கும்
ஜெயலலிதாவை எதிரி என்றும் கலைஞரை துரோகி என்றும் வகை பிரிச்சாச்சு. மீதம் இருக்கும் வைகோ மற்றும் ராமாதாசு போன்ற காமெடியன்களை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது. வைகோ அவ்வப்போது தலை காட்டுகிறார் அப்புறம் தலைமறைவாகிவிடுகிறார். இவர்கள் எல்லோரையும் விட மிக பரிதாபகரமான நிலையில் இருப்பது ராமதாசு தான்
ஒரு நாள் தி.மு.க.வை குறை கூறுகிறார், அடுத்த நாள் தி.மு.க. அரசை கவிழ்க்க சதி நடப்பதாகவும் அதற்கு தான் துணை போகமாட்டேன் என்கிறார், முத்துக்குமாருக்கு சென்று அஞ்சலி செலுத்துகிறார் அடுத்த நாள் தன் மகனின் அமைச்சர் பதவிக்காக காங்கிரசுடன் கொஞ்சி குலவுகிறார். இதுல வேற கலைஞர் அதிகமா நக்கிட்டாரு அதனால அவர அதிகமா கும்முவோம் ராமதாசு கொஞ்சமா நக்குறாரு அதனால கொஞ்சமா கும்முவோம் அப்படின்னு வேற நியாயம் பேசுறாங்க. எப்படி நக்குனா என்னடா எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தானே, அதுல ராமதாசு மாதிரி பல்டி அடிச்சு பல்டி அடிச்சு நக்குறத யாரும் பார்த்ததே இல்லை
Tuesday, February 17, 2009 |
Posted by
உடன்பிறப்பு
at
3:45 AM
2
comments
Links to this post
Labels: ராம்தாசு
சாமான்யர்களை கூட சந்திக்கும் ஜெயலலிதா
ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற பெரும் தலைவர்களையே தன் வீட்டு வாசலில் காக்க வைத்த ஜெயலலிதா சாமான்யர்களை கூட சந்திக்கும் அன்பு உள்ளம் உடையவர் என்று தெரிகிறது. அம்மாவின் இந்த அருட்கொடை அனைத்து தரப்பினருக்கும் கிடைக்குமா என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை
ஈழ விஷயம் தொடர்பாக பல தரப்பட்டவர்களும் கலைஞர் மீது அதிருப்தி கொண்டு இருப்பது தெரிகிறது. இது எங்களுக்கும் உண்டு என்பதையும் தெரியபப்டுத்தி இருக்கிறோம். ஈழத்துக்காக கட்சி பேதமின்றி அவர்களுடன் ஒன்றுபடலாம் என்று விழைந்தால் அவர்களுக்கு ஈழத்தை விட கலைஞரை கும்முவதே முக்கியமாக இருக்கிறது. இவர்களை நம்பி ஈழ விஷயத்தில் உணர்ச்சி வசப்படுபவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த மாதிரி குழி பறிப்பவர்களுடன் ஒன்றுபடுவதை விட ஒதுங்கி இருப்பதே நலம்
ஒன்னரை அணா பெறாத பிளாக் நடத்துபவர்களே இவ்வளவு அரசியல் செய்தால் கலைஞர் எவ்வளவு அரசியல் செய்வார். நாங்கள் எப்பொதும் கலைஞர் பக்கம் தான்டா போங்கடா நீங்களும் உங்கள் குள்ள நரித்தனமும்
கூடுதல் செய்தி கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார் அன்புமணி
Saturday, February 07, 2009 |
Posted by
உடன்பிறப்பு
at
6:26 AM
0
comments
Links to this post
Labels: ஜெயலலிதா
கலைஞரை கும்முபவர்களுக்கு இலவச சேவை
உடன்பிறப்புகளுக்கு கலைஞர் ஜுரம் குறைந்துவிட்டதாக வலையுலக "டாக்டர்" ஒருவர் கண்டுபிடித்து இருக்கிறார். ஆம் ஈழ ஆதரவு எழுச்சியால் உடன்பிறப்புகளுக்கு கலைஞர் ஜுரம் குறைந்து தான் போய்விட்டது. ஜுரம் குறைந்தால் உடல்நிலை தேறி வருகிறது என்று தானே அர்த்தம். அது தான் தி.மு.கழகத்தின் ஜனநாயகம். ஆனால் சில தனியார் கம்பெனி கட்சிக்காரர்களுக்கு எத்தனை எழுச்சி வந்தாலும் அவர்கள் தலைவர் ஜுரம் குறைவதில்லை. கலைஞரை வசைபாடும் அவர்கள் தங்கள் கட்சி தலைமை என்று வந்துவிட்டால் பூசி மெழுகுவார்கள். ஈழத்துக்காக தலைமையையே விமர்சிக்கும் ஒரே ஜனநாயகவாதிகள் உடன்பிறப்புக்கள் மட்டுமே
கலைஞரை கும்முவதற்கென்றே ஏற்கனவே ஒரு குரூப்பு தலைமுறை தலைமுறையாக இயங்கி வந்து கொண்டு இருக்கிறது அவர்களுக்கெல்லாம் தலைவர் எப்பொதுமே சிம்மசொப்பனமாக விளங்கி வந்து இருக்கிறார். இப்போது அந்த குரூப்புக்கு சில அறிவுஜீவிகள் இலவச சேவை வழங்க முன் வந்து இருக்கிறார்கள். அந்த குரூப்பாவது பரவாயில்லை அவர்கள் நமக்கு எதிரி ஆனால் இந்த இலவச சேவை வழங்குபவர்கள் தான் பாவம். அடுத்த தேர்தலில் எந்த பக்கம் என்பது தேர்தல் நாள் அறிவிக்கப்படும் வரை அவர்களுக்கே தெரியாது. அத்தகையவர்களிடம் இருந்து என்ன லாஜிக்கை எதிர்பார்த்துவிட முடியும் என்பது இயற்கையான கேள்வி தானே
அந்த அறிவுஜீவி தன்னை அந்த குரூப்புடன் அடையாளப்படுத்தும் அவாவில் திராவிடர் கழகத்தையும் வம்புக்கு இழுத்து ராமகோபாலன் வகையறாக்களுடன் சேர்ந்து கொள்கிறார். ராமகோபாலன் கோஷ்டியின் வாதமே ஏன் இந்து மதத்தை மட்டுமே குறை கூறுகிறீர்கள் ஆனால் மற்ற மதத்தை கண்டு கொள்வதிலை என்பது. தி.க.வினர் தங்கள் மதம் என்ற உரிமையிலேயே இந்து மதத்தை விமர்சிக்கிறார்கள் அவர்களின் கேள்விக்கு பதில் சொல்ல கடமைபட்டுள்ள ராமகோபாலன் கோஷ்டி அதற்கு வழி இல்லாமல் மேடை போட்டு மற்ற மதத்தவரை பற்றி அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்களுக்கு வக்காலத்து வாங்க வந்து இருக்கும் அறிவுஜீவி உடன்பிறப்புகளை விமர்சிப்பது உச்சகட்ட நகைச்சுவை
இறுதியாக அந்த அறிவுஜீவியின் கிரிக்கெட் உதாரணத்துக்கே வருவோம். இங்கே நாம் எதிரணியை பேசுவது தேவையில்லாதது என்பதால் ஜெயலலிதாவை விட்டுவிடலாம். டெண்டுல்கர் ரன் எடுக்கவில்லை என்றால் அவரை குறை சொல்வது நியாயம் தான் என்றாலும் எல்லா தோல்விகளுக்கும் அவரை குறை சொல்வது எப்படி நியாயமாகும். முக்கியமான மேட்சுகளின் போது அதன் பொறுப்பு மொத்த அணிக்கும் இருக்கிறது பேட்டிங்கில் சொதப்பினால் அடுத்து பவுலிங்காவது காப்பாற்றுமா என்று தானே எண்ணுவோம் பவுலரும் சிக்ஸராக விட்டுக் கொடுத்தால் அவரையும் கும்மித் தானே ஆக வேண்டும். முக்கியமான மேட்சுகளில் தோல்வியே கிடைக்தால் டெண்டுலகரை மட்டும் குறை சொன்னால் எல்லாம் சரியாகி விடுமா மொத்த அணியே சரியில்லை என்று தானே அர்த்தம்.
வெற்றி பெறும் போது அணியாக அதை கொண்டாடுவதும் தோல்வி என்றால் டெண்டுல்கரை மட்டுமே குறை சொல்வதும் சிலருக்கு கைவந்த கலையாக இருக்கலாம் அது அவர்கள் பிறவிக் குணம் அதை மாற்ற முடியாது
Thursday, February 05, 2009 |
Posted by
உடன்பிறப்பு
at
1:55 PM
8
comments
Links to this post
Labels: ஈழம்
மண்டல் தீக்குளிப்பும் இராஜீவ்காந்தி முற்றுகையும்
ஒரே வாரத்தில் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தூங்கிக் கொண்டு இருந்த தமிழ் சமூகம் விழித்து கொண்டுள்ளது ஆனால் அது இன்னமும் ஈழப் பிரச்சினையில் நல்ல தலைமை கிடைக்கமால் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரு முத்துக்குமார். அவருடைய தீக்குளிப்பு முடிவில் உடன்பாடு இல்லை என்றாலும் அவர் தொடங்கி வைத்த நெருப்பு இன்று கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருப்பதை கண்டும் காணாமல் இருப்பது என்பது முத்துக்குமார் எடுத்த முடிவை விட ஆபத்தானது
சந்தடி சாக்கில் சில பெரிசுகள் அறிவுரை சொல்ல கிளம்பிவிட்டார்கள் "இளைஞர்களே உணர்ச்சிவசப்படாதீர்கள்" என்று சொல்கிறார்கள். மிக நல்ல அறிவுரை தான் ஆனால் அது உண்மையிலேயே இளைஞர்கள் மீதான அக்கறை மட்டுமா அல்லது வேறு உள்நோக்கம் இருக்கிறதா என்றே சந்தேகம் வருகிறது. ஏனென்றால் அந்த அறிவுரை சொல்பவர்களின் வரலாறு அப்படி
இன்று அறிவுரை சொல்பவர்கள் கொஞ்சம் வரலாற்றை புரட்டிப் பார்க்க வேண்டும். வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் மண்டல் பரிந்துரையை அமுல்படுத்த விளைந்த போது இதே மாதிரி ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் மண்டல் பரிந்துரைகளுக்கு எதிராக போராடினார்கள். இப்போது அறிவுரை சொல்லும் அண்ணாசாமிகள் காலம் காலமாக விரும்பி படிக்கும் பத்திரிக்கைகள் எல்லாம் அப்போது எப்படி நடந்து கொண்டன. அந்த மாணவர்களுக்கு பக்க பலமாக இருந்தன
அந்த மாணவர்களின் போராட்டத்தை உசுப்பிவிட்டு கடைசியில் ஒரு மாணவர் தீக்குளித்தார் அவரை ஹீரோவாக வர்ணித்தன அந்த இதழ்கள். தீக்குளித்த மாணவரை பார்க்கச் சென்ற இராஜீவ் காந்தியை முற்றுகை இட்டார்கள், இன்று அதே இராஜிவ் காந்தியை புனித பிம்பம் ஆக்கிவிட்டார்கள். மண்டலுக்கு எதிராக தீக்குளித்தால் ஹீரோ ஈழத்துக்காக தீக்குளித்தால் உணர்ச்சி மேலீடு. மண்டலுக்கு எதிராக மாணவர்கள் திரண்டால் அது புரட்சி ஈழத்துக்கு திரண்டால் அது அறியாமையா. உங்கள் நியாயம் புல்லரிக்க வைக்குது ஐயா
Tuesday, February 03, 2009 |
Posted by
உடன்பிறப்பு
at
10:23 AM
0
comments
Links to this post
Labels: ஈழம்

