ஆண்மை இழந்து எஸ்கிமோக்கள் போல குனிந்தால் அதிமுகவில் இருக்கலாம்

ஆண்மை இழந்து எஸ்கிமோக்கள் போல குனிந்தால் அதிமுகவில் இருக்கலாம்: ஜோதி என்ற தலைப்பில் வெளியான செய்தியை தட்ஸ்தமிழ் தளத்தில் பார்த்து இருப்பீர்கள். அ.தி.மு.க.வில் இருந்தால் என்ன மாதிரியான மரியாதை கிடைக்கும் என்பது உலகுக்கே தெரியும். அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறிய வக்கீல் ஜோதி இவ்வாறு பேசியதாக செய்தி கூறுகிறது. வக்கீல் ஜோதி சொன்னது அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு மட்டும் பொருந்துகிறதோ இல்லையோ நம்ம வலையுலக வீராச்சாமிகளுக்கு மிக அதிகமாக பொருந்தும்

இந்த வலையுலக வீராச்சாமிகள் தினம் தினம் கலைஞரை பற்றி விமர்சித்தும் நக்கல் நையாண்டி செய்தும் பதிவு செய்கிறார்கள். அதிலும் சொந்தமாக செய்கிறார்களா என்று பார்த்தால் விலைபோகாத துக்ளக்கில் இருந்து சுட்டு போடுகிறார்கள். அந்த சோ ராமசாமியே தினம் தினம் வெளிவந்த உடனேயே முரசொலியை வாங்கி அதை உல்டா செய்து அடுத்த வாரம் துக்ளக்காக வெளியிட்டு ஏதோ ஒட்டிக் கொண்டு இருக்கிறார். அதிலிருந்து வெட்டி எடுத்து போடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்

இந்த வலையுலக வீராச்சாமிகள் கலைஞரை பற்றி எழுதும் போது மட்டும் தங்கள் உடைவாளை உருவிக் கொண்டு வந்துவிடுவார்கள். இதுவே அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதாவை பற்றி ஒரு வரி கூட எழுத திராணி இல்லாத முதுகெலும்பு இல்லாத கோழைகள். இவர்கள் உண்மையிலேயே நடுநிலைவாதிகள் என்றால் ஜெயலலிதா பற்றியும் எழுதவேண்டியது தானே. ஜெயலலிதா அடிக்காத பல்டியா அல்லது அவர் நடத்தாத அரசியல் நாடகமா. வக்கீல் ஜோது சொன்னது இந்த மேதாவி கோழைகளுக்கு தான் அதிகம் பொருந்தும்

ஐடி (IT) மக்கள் மீது மூத்த பதிவரின் திடீர் பாசம் - நுண்ணரசியல்

இரு தினங்கள் முன் ஒரு மூத்த பதிவர் ஐடி மக்கள் மீது கரிசனம் காட்டி எழுதிய பதிவை படித்து இருப்பீர்கள். அவர் தன்னை பார்ப்பன பதிவராக அடையாளப்படுத்திக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருவதால் அந்த மகிழ்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கா வண்ணம் நாமும் அதே பதத்தை பயன்படுத்துகிறோம். அந்த பதிவில் பல நுண்ணரசியல் மறைந்து இருக்கிறது. ஆனால் மேலோட்டமாக ஐடி மக்கள் மீது கரிசனம் காட்டப்படுவது போல் மிக சாமர்த்தியமாக எழுத்தப்பட்டது. அந்த பதிவில் மறைந்து இருக்கும் தந்திரங்களை பார்ப்போம்

எப்பவுமே நேரடியாக செயல்படாமல் ஒரு போர்வைக்குள் இருந்து செயல்படுவது தான் இவர்கள் வழக்கம். கலைஞரை முடக்க நேரடியாக முயன்று அது முடியாது என்று இறையாண்மை போர்வையை கையில் எடுத்தது போல் தான் இதுவும். தாங்கள் தாக்கப்படுபவர்களாக காட்டிக் கொள்ள இவருக்கு கிடைத்து இருக்கும் போர்வை தான் ஐடி மக்கள்

முதலில் "பார்ப்பனர்களை அடுத்து..." என்று தலைப்பு வைத்ததன் மூலம் அதிகம் தாக்கப்படுபவர்கள் பார்ப்பனர்கள் தான் என்று இவரே முடிவு செய்து விடுகிறார். இனி யாராவது தாக்கப்படுபவர்களாக தங்களை காண்பிக்க விரும்பினால் அவர்களும் "பார்ப்பனர்களை அடுத்து..." தான் வர வேண்டும் என்பது தான் சூட்சமம்

ஐடி மக்களை கேடயமாக பயன்படுத்துவதால் அவர்கள் தங்கள் பிரச்சினையை முன் வைப்பார்கள். "அதிகம் தாக்கப்படுபவர்கள் பார்ப்பனர்கள்" என்ற கருத்தை பற்றி யாரும் பேசப்போவதில்லை. இதனால் இது மறைமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு வாதமாகிவிடும். மேலும் வலைப்பதிவுலகில் பாதிப் பேர் ஐடி மக்கள் தான். அவர்களை எல்லாம் தன் போலி கரிசனத்தால் வென்று விட்டால் வலையுலகில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் விழிப்புணர்வையும் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இவை எல்லாம் தான் ஐடி மக்கள் மீது அந்த மூத்த பதிவருக்கு வந்த திடீர் பாசத்தின் காரணம்

இவர்கள் தாக்கப்படுகிறவர்கள் அல்ல, தாக்குபவர்கள்





ரஜினியை இழுக்கும் ராமதாசு

பா.ம.க தலைவர் ராமதாசு பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. கூட்டணியில் இருந்த வரைக்கும் தினமும் ஏதாவது கழக ஆட்சியை பற்றி அனுதினமும் பத்திரிக்கைகளில் ஏதாவது உளறிக் கொட்டி தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வார். ஒரு கட்டத்தில் அவரது இம்சை தாங்க முடியாத அளவுக்கு போகவே கலைஞர் அன்புமணி வாயிலாக ராமதாசுக்கு ஆப்படித்தார். அப்புறம் கொஞ்ச நாளாக மூடிக் கொண்டு இருந்த ராமதாசு இப்போது மீண்டும் தனது பல்லவியை ஆரம்பித்து இருக்கிறார்

கூட்டணியில் இருந்து கழட்டிவிடப்ப்பட்ட பிறகு ஜெயலலிதாவிடம் இருந்து ஆதரவுக் கரம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தார் ராமதாசு. ஆனால் ஜெயலலிதாவோ ராமதாசு என்ற ஒருவர் தமிழக அரசியலில் இருப்பதாகவே காட்டிக் கொள்ளவில்லை. அப்புறம் இலங்கை பிரச்சினை எல்லாம் கையில் எடுத்து பார்த்தார். கலைஞர் வைகோவை சிறையில் தள்ளியதும் மீண்டும் டர்ர்ராகிவிட்டார் ராமதாசு

இப்படி தமிழக அரசியலில் திக்கு தெரியாமல் தவித்து கொன்டு இருக்கும் ராமதாசுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆபத்பாந்தாவனாக காட்சி அளித்ததில் வியப்பு ஒன்றும் இல்லை. ஒரு காலத்தில் ரஜினியின் பாபா திரைப்படத்துக்கு எதிராக அரசியில் செய்து மலிவு விளம்பரம் தேடிய ராமதாசு இப்போது அதே ரஜினிக்கு நல்லவர் சான்றிதழ் வழங்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார். ஏற்கனவே விஜயகாந்த் அவருடைய கோட்டையான விருத்தாசலத்துக்கே வந்து ஆப்படித்ததால் ஆடிப் போயிருந்த ராமதாசுக்கு கலைஞரும் அதை தொடர்ந்து ஜெயலலிதாவும் ஆப்படித்ததால் கொஞ்சம் அதிகமாகவே ஆடிப் போய் இருக்கிறார் ராமதாசு

இதே ரீதியில் போனால் தமிழக அரசியலில் காணாமல் போகும் வாய்ப்புகள் அதிகமாவதை உணர்ந்த ராமதாசு கடந்த சில நாட்களாக ரஜினியை புகழ்ந்து பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். ரஜினி நடித்து அடுத்து வெளிவர இருக்கும் எந்திரன் படத்துக்கு இவர்களே ஏதாவது விளம்பரம் செய்தாலும் ஆச்சர்யம் அடைவதற்கு ஒன்றும் இருக்கப் போவதில்லை

கலைஞரின் தாயுள்ளம்

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கைதான வைகோவை ஓராண்டு காலம் உள்ளே வைத்து விருந்து கொடுத்தார் ஜெயலலிதா. மேலும் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கோ பொடா என்னும் மிக கடுமையான பிரிவின் கீழ். இன்று கழக ஆட்சியில் வைகோ கைது செய்யப்பட்டாலும் அவர் மீது எந்த விதமான கடுமையான வழக்கும் தொடுக்கப்படாமல் ஒரு மாதத்திற்குள்ளேயே விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதே பிரச்சினையில் கைதாகி சிறை சென்ற இயக்குநர்களும் இன்று ஜாமீனில் இருக்கிறார்கள். கலைஞரின் வைராக்கியம் எப்போதுமே பிரசவ வைராக்கியம் தான். அது தான் அவரின் தாயுள்ளம்

கலைஞர் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அவர் ஆட்சியில் தான் எல்லோரும் தீவிரவாதத்தை வெளிப்படையாக ஆதரித்து பேசுகிறார்கள் என்று ஒரு கூட்டம் கூவியது. அவர்கள் வாயை அடக்க கலைஞர் சில கைது நடவடிக்கைகளை மேற்கொண்டார். சினிமா துறையை சேர்ந்தவர்களையும் சேர்த்து கைது செய்ததால் அவர்களும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். இதன் மூலம் இலங்கை பிரச்சினையை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சென்ற பெருமை தமிழின தலைவர் கலைஞர் அவர்களையே சேரும்.

கலைஞர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்ட போது முன்பு தேசியவாதம் என்று பேசிய அதே குரல்கள் அப்படியே பல்டி அடித்து அய்யோ கலைஞர் ஈழத் தமிழர்களை கைவிட்டுவிட்டார் என்று மாற்றி வாசிக்க ஆரம்பித்தன. இப்போது அவர்கள் தங்கள் முகத்தை எங்கே கொண்டு போய் வைத்து கொள்ளப் போகிறார்கள்

கலைஞர் தன் ஆட்சியை விட்டு விட விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். ஆம் கலைஞர் ஆட்சியை விட்டு விட விரும்பாமல் இருக்கலாம். தன் கடின உழைப்பினால் ஐந்து முறை ஆட்சி பொறுப்பேற்றும் அதை முழுவதுமாக நடத்தவிடாமல் கலைத்தவர்கள் ஆயிற்றே இவர்கள். இப்போதும் சும்மா இருப்பார்களா. அதனால் தான் அப்படியும் இப்படியும் மாற்றி மாற்றி கூப்பாடு போட்டு எப்படியாவது ஆட்சியை காவு வாங்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கலைஞர் ஆட்சி தொடர வேண்டும், இந்த முறையும் முழுமையாக நடைபெற வேண்டும்.

உணர்ச்சியை உசுப்பி விடும் சூழ்ச்சிகளுக்கு இரையாவதை விட பல்டி அடிப்பது ஒன்றும் தவறல்ல, ஆட்சியில் இருக்கும் வரை சூழ்ச்சியாளர்களுக்கு ஆப்புகள் தொடரும்

ஒபாமா ஆரம்பித்த சமூக புரட்சித் தீ உலகெங்கும் பரவட்டும்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா வெற்றி பெற்று உலகின் மிக சக்தி வாய்ந்த பதவியை எட்டிவிட்டார். ஊடகங்கள் ஒரு கறுப்பினத்தவர் பெற்ற வெற்றியாக இதை சித்தரிக்கின்றன. உண்மையில் ஒபாமா முழு கறுப்பினத்தவர் அல்ல அவருடைய தந்தை கறுப்பினத்தவராக இருந்தாலும் அவரது தாயார் வெள்ளை இனத்தவர். ஒரு பாதி கறுப்பினத்தவர் அமெரிக்க அதிபர் ஆவதே இவ்வளவு கடினம் என்றால் ஒபாமாவின் வெற்றி நிச்சயம் போற்றத்தக்கதே. இதில் இன்னொரு கோணமும் இருக்கிறது. அமெரிக்கா என்பது ஒரு குடியேற்ற நாடு. பல நாடுகளில் இருந்து வந்து குடி ஏறியவர்களை கொண்ட நாடு தான் அமெரிக்கா, இப்படிப்பட்ட கலவையான சமூக அமைப்பில் எந்த ஒரு இனத்தை சேர்ந்தவரும் அதிபர் ஆகலாம். இதுவே முழுக்க முழுக்க வெள்ளைக்கார் நாடான பிரிட்டனிலோ இல்லை பிரான்ஸிலோ இதே மாதிரி ஒரு கறுப்பினத்தவர் பிரதமர் அல்லது அதிபர் ஆவது தான் உண்மையான புரட்சியாகும். இருந்தாலும் இது ஒரு மிக முக்கியமான நிகழ்வு என்பதி சந்தேகமில்லை

நம்மில் சிலர் அமெரிக்காவில் யார் அதிபர் ஆனால் நமக்கு என்ன என்ற கேள்வியை முன் வைக்கின்றனர். இந்த அமெரிக்க தேர்தல் வெறும் ஒரு அரசியல் சம்பிரதாயமாக மட்டும் இருந்தால் அவ்வாறு சொல்பவர்களுடன் முழுவதும் ஒத்துப் போகலாம். ஆனால் இந்த தேர்தல் முடிவு உலகம் முழுவதுமே பொருளாதார மற்றும் சமூக விளைவுகளையும் ஏற்படுத்த வல்லது என்பதால் இந்த தேர்தல் பற்றி நாம் அக்கறைப்படும் அவசியம் ஏற்பட்டுவிடுகிறது

இந்தியாவில் உள்ள எந்தவொரு மென்பொருள் நிறுவணமும் முழுக்க முழுக்க நம் நாட்டின் உள்நாட்டு தேவைக்காக மட்டுமே இயங்கவில்லை. பெரும்பாலான மென்பொருள் நிறுவணங்கள் அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு சந்தையை மையமாக வைத்தே இயங்குகின்றன. அதனால் அமெரிக்கா மட்டுமின்றி பல நாட்டு அரசியலும் நம்மை பாதிக்கவே செய்யும்

சமூக ரீதியாக பார்த்தால் அமெரிக்காவின் ஒடுக்கப்பட்ட மக்கள் என்று கருதப்பட்ட இனத்தில் இருந்து ஒருவர் அந்நாட்டை ஆள்வதற்கு தகுதி பெற்று இருக்கிறார் என்பது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைய வாய்ப்பு இருக்கிறது. இந்த வெற்றி சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மேலும் தன்னம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கும்.

மேலை நாடுகளில் தொழில் புரட்சி ஏற்பட்ட போது அது மேலை நாடுகளோடு நின்றுவிடவில்லை அது உலகெங்கும் பரவியது. அதன் பலனை இன்றும் நாம் அனுபவித்து வருகிறோம். அதே போல் முன்னாள் சோவியத்தில் பொதுவுடைமை புரட்சி ஏற்பட்ட போது அது சோவியத்தோடு நின்றுவிடவில்லை. உலகின் பல பகுதிகளுக்கும் அது பரவியது. சீனாவில் சில மாற்றங்களோடு இன்றும் அது வெற்றி கொடி கட்டி வருகிறது. இந்தியாவில் இன்னும் பொதுவுடைமை தாக்கம் இருப்பதால் தான் அமெரிக்காவில் பல வங்கிகள் திவாலானாலும் நமக்கும் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை. பொதுவுடைமை சமுதாயத்துக்கு வித்திட்ட தொழிலாளர் பிரச்சினை ஆரம்பித்ததும் இதே முதலாளித்துவ நாடுகளில் தான்


இதே போல் இன்று அமெரிக்காவில் ஏற்பட்டு இருக்கும் சமூகப் புரட்சித் தீ மென்மேலும் பரவ வேண்டும். உலகில் பல்வேறு நாடுகளிலும் ஒடுக்கப்படும் மக்களுக்கு விடியல் பிறக்க வேண்டும்