வேட்டி கட்டுவது எப்படி என்று இணையத்தில் தேடியபோது யூடியூபில் ஒர் வீடியோ கிடைத்தது. ஒரு வெள்ளைக்காரர் வந்து சொல்லி தருகிறார். அதுவும் நாம் தமிழ்நாட்டில் வேட்டி கட்டும் முறை அல்ல. இது நமக்கு எல்லாம் ஒரு சவால் தானே. சேலை கட்டுவது பற்றி கூட இணையத்தில் இருக்கிறது ஆனால் வேட்டி பற்றி இல்லை. நம் மக்கள் எதற்கு எல்லாமோ வீடியோ போடுகிறார்கள் வேட்டி கட்டுவது பற்றி ஒரு வீடியோ போட்டால் நல்லா இருக்கும். இன்று ஞாயிறு விடுமுறை தானே நீங்கள் கூட ஒரு வீடியோவை தயார் செய்து போடலாம். நான் ஏன் போடக் கூடாது என்று கேட்கிறீர்களா. இணைய விஷயத்தில் நான் எல்லாம் இன்னும் கத்துக் குட்டி தான். உங்களை போன்ற பெரிய ஜாம்பாவன்கள் உலவும் இடம் அது. இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை
Pages
ஜெயலலிதாவை புறம் தள்ளிய நமீதா
சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த ஒரு கடை திறப்பு விழாவில் நமீதா கலந்து கொண்டு சிறப்பித்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. தூத்துக்குடி அ.தி.மு.க. பிரமுகரான இரா.ஹென்றி தனது புதிய நகை கடை திறப்பு விழாவுக்கு நமீதாவை அழைக்க ஏற்பாடு செய்து இருந்தார். இந்த செய்தி கசிய ஆரம்பித்த உடனேயே அ.தி.மு.க. வட்டாரத்தில் சலசலப்பு உண்டாகியது. நமீதா எப்போது வருவார் என்ற கேள்வி தான் அ.தி.மு.க.வினரிடம் எங்கேயும் எப்போதும் கேட்கப்பட்டது. அ.தி.மு.க. வட்டாரத்திலும் நமீதா வருகை பற்றிய பேச்சு தான் ஹாட் டாபிக் ஆக இருந்தது. அ.தி.மு.க தலைவி வந்த போது கூட இவ்வளவு பரபரப்பு ஏற்பட்டது கிடையாது. நமீதாவை அழைத்த அ.தி.மு.க. பிரமுகர் சும்மா இருக்க முடியுமா அதை விளம்பரப்படுத்த வேண்டாமா. ஊரெல்லாம் போஸ்டர், கட்-அவுட் என்று அமர்க்களப்படுத்திவிட்டார். எல்லா போஸ்டர்களிலும், கட்-அவுட்களிலும் நமீதா தான் எங்கும் நீக்கமற நிறைந்து இருந்தார். சமீபத்திய அ.தி.மு.க. வரலாற்றில் கட்சி தலைவரின் விழா ஒன்றுக்கு அடிக்கப்பட்ட போஸ்டர்களில் ஜெயலலிதாவை விட இன்னொருவர் அதுவும் இன்னும் அரசியலில் நுழையாத ஒருவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை
மதுரை வரை விமானத்தில் வந்த நமீதா மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு காரில் சென்றார். அவர் வரும் வரை அவர் வருகைக்காக காத்திருந்த அ.தி.மு.க. வட்டார்த்தில் ஒரே ரன்னிங் கமெண்டரி தான். அதோ அங்கு வந்து விட்டார், இதை கடந்துவிட்டார் என்று ஏக அமர்க்களமாம். பின்னர் நமீதா வந்தவுடன் கேட்கவா வேண்டும். கூட்டம் அலைமோதியது. அதனால் ஏற்பட்ட டிராபிக் ஜாமில் தூத்துக்குடி மாவட்டமே ஸ்தம்பித்தது. ஜெயலலிதா விஜயம் செய்தபோது கூட இவ்வளவு அமளி ஏற்படவில்லை என்று செய்திகள் சொல்கின்றன. உடன்பிறப்புகளே உஷார்! அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவை விட்டால் வேறு ஆள் கிடையாது என்று கட்சிப் பணிகளில் அலட்சியம் காட்டிவிடாதீர்கள், நமக்கு தலைவலி தருவதற்கென்றே புதியதாக ஒரு புயல் புறப்பட்டு இருக்கிறார்
Saturday, September 13, 2008 |
Posted by
உடன்பிறப்பு
at
9:34 PM
2
comments
Links to this post
Labels: நமீதா