Sunday, November 20, 2011 |
Posted by
உடன்பிறப்பு
at
12:38 PM
0
comments
Links to this post
Labels: விலை உயர்வு
Sunday, November 20, 2011 |
Posted by
உடன்பிறப்பு
at
12:38 PM
0
comments
Links to this post
Labels: விலை உயர்வு
சமீபகாலங்களில் தினமலர் வலைத்தளங்களில் அடிபடுவது வாடிக்கையாகிவிட்டது. தினமலர் ஒவ்வொரு முறையும் தனது தரத்தை தாழ்த்திக் கொள்ளும் போதெல்லாம் நமது தமிழ் வலைப்பதிவர்கள் அதனை தோலுரித்து அதன் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறார்கள். தினமலரும் தான் செய்வது தவறு என்று தெரிந்தே செய்கிறது. தனது தரம் தாழ்ந்த செய்திகளை எதிர்ப்பு கிளம்பியவுடன் தனது வலையில் இருந்து நீக்குவதில் இருந்தே தான் வெளியிட்ட செய்தி அல்லது படைப்பு பலரின் உணர்வுகளை புண்படுத்தி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறது. ஆனாலும் அதை மறந்துவிட்டு தனது அடுத்த தரம் தாழந்த செயலை வெகுவிரைவிலேயே அரங்கேற்றுகிறது
நேற்றைய அதன் செய்தி ஒன்றில் தமிழ் உணர்வாளர்களையும் அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக ஒரு படைப்பை தனது சிறப்பு நிருபர் என்ற பெயரில் வெளியிட்டு இருந்தது. இதனை பலர் வஞ்சப்புகழ்ச்சி பாணியில் இருப்பதாக நினைத்து வருத்தப்பட்டு இணையத்தில் எழுதி இருந்தார்கள். மேலோட்டமாக பார்த்தால் அந்த செய்தி சோ ராமசாமி போன்றவர்கள் பாணியிலான நக்கல் நடையில் இருப்பதாக தோன்றினாலும் அந்த செய்தியின் பின்னே தினமலரின் பல நோக்கு திட்டங்கள் புதைந்து கிடக்கின்றன. இவை எல்லாம் ஏதோ தெரியாமல் செய்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தையும் தினமலர் அந்த செய்தி மூலம் நிறுவ முயற்சி செய்கிறது
அந்த செய்தியின் மூலம் தினமலர் நிறைவேற்ற துடிக்கும் முதல் நோக்கம் அடையாளப்படுத்துவது. இதை எளிய மொழியில் சொல்ல வேண்டுமானால் தமிழ் சினிமாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். தமிழ் சினிமாவில் நெல்லைப் பகுதியில் கதை நடப்பது போல் எடுக்க வேண்டும் என்றால் தேவை இல்லாமல் பாத்திரங்கள் "எலே" என்ற சொல்லை பயன்படுத்துவது போல் பல இடங்களில் புகுத்தி இருப்பார்கள். ஆனால் உண்மைக்கும் சினிமாவிற்கும் வெகு தூரம் இருக்கும். அதே மாதிரி தான் இங்கே பாலியல் பலாத்காரம் புரிந்த ஒருவரை அவர் தமிழர் என்று அடையாளப்படுத்த முயல்கிறது. வெறுமனே அவரை தமிழர் என்று அடையாளப்படுத்தினால் தனது கோர முகம் வெளிப்பட்டுவிடுமே என்று அவரை தலித் என்றும் மாற்றுத் திறனாளி என்றும் பரிதாபம் கொள்வது போல் பூசி மெழுகுகிறது
தினமலரின் இரண்டாவது நோக்கம் கொச்சைப்படுத்துவது. தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதில் தினமலர் என்றுமே வெட்கப்படுவதில்லை. தமிழ் உணர்வாளர்கள் மொழி உணர்வை தூண்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டும் தினமலர் மத உணர்வை தூண்டும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.இன் தீவிர கைப்பாவை என்பது உலகறிந்த உண்மை. செங்கொடி தீக்குளித்து மாண்ட போது அவரை காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார் என்று கொச்சைப்படுத்திய தினமலர் இப்போது ஒரு பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்காக தமிழ் உணர்வாளர்கள் போராட வேண்டும் என்று அவர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது
ஆனால் முன்னே மாதிரி தினமலரால் தனது விஷத்தை கக்கிவிட்டு நிம்மதியாக இருக்க முடிவதில்லை. நம் தமிழ் பதிவர்கள் உடனுக்குடனேயே தினமலரி சதித் திட்டங்களை அம்பலப்படுத்தி வருகிறார்கள். எங்கே இவர்கள் மேலும் மேலும் விழிப்புணர்வு பெற்றுவிடுவார்களோ என்று அஞ்சியே அண்ணா நூலகம் இடமாற்றம் போன்ற அறிவை முடக்கும் செயல்களை முன்னின்று ஊக்கப்படுத்தி வருகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை
Tuesday, November 15, 2011 |
Posted by
உடன்பிறப்பு
at
7:03 AM
0
comments
Links to this post
Labels: தினமலர்
Tuesday, August 09, 2011 |
Posted by
உடன்பிறப்பு
at
7:34 PM
0
comments
Links to this post
Labels: சமச்சீர் கல்வி

பச்சைத் தமிழன் சீமான் என்று சொல்வார்கள் இவரைப் பற்றி. இவர் நல்லவரோ இல்லையோ இவர் மீது சாட்டப்படும் குற்றச்சாட்டுகளைப் பற்றியும் நமக்கு கவலை இல்லை, ஏனென்றால் இவர் அந்த அளவிற்கு வொர்த் இல்லை என்பது நம் கருத்து. அதே நேரம் இவருக்கு ஆப்பு ஜெயலலிதா கையால் தான் என்றும் நன்றாகத் தெரிகிறது. இவர் எப்படியும் நடந்து கொள்ளட்டும் ஆனால் நான் சுத்தமானவன் என்றும் ஒரு ஈழத்து பெண்ணிற்கு தான் வாழ்க்கை கொடுப்பேன் என்று உட்டாரே ஒரு டமால் அதை தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இவர்கள் அரசியல் செய்து அதில் ஆதாயம் அடைவதற்கு அப்பாவி பெண்களின் வாழ்க்கை தான் கிடைத்ததா???
Monday, July 18, 2011 |
Posted by
உடன்பிறப்பு
at
4:57 PM
0
comments
Links to this post
Labels: ஈழம்
சென்ற நாடாளுமன்ற தேர்தலின் போது வைகோ போன்றவர்கள் சேர்ந்து ஈழம் பெற்றுத் தருவோம் என்று கூறினார்களே? இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கழக கூட்டணி வெற்றி பெற்றதால் பலரும் ஆட்சி மாறினால் ஈழம் கிடைத்துவிடும் என்று அள்ளிவிட்டுக் கொண்டு இருந்தார்கள். இதோ தேர்தலில் வெற்றி பெற்ற செய்திகள் வந்து கொண்டு இருக்கும் போதே அ.தி.மு.க. தலைவி கொடுத்து இருக்கும் பேட்டியின் காணொளியை பாருங்கள். பேட்டி எடுக்கும் ரபி பெர்னார்டு ஈழத் தமிழர்கள் என்று குறிப்பிட்டு கேட்கிறார். அதற்கு பதில் அளிக்கும் அ.தி.மு.க. தலைவியோ இலங்கைத் தமிழர்கள் என்றும் இலங்கை வாழ் தமிழர்கள் என்று மட்டுமே குறிப்பிடுகிறார். மறந்தும் கூட அவர் வாயிலிருந்து ஈழம் என்ற வார்த்தை வரவே இல்லை. நிஜம் இப்படி இருக்க இத்தனை நாட்கள் தமிழின துரோகி என்று பட்டம் கட்டியவர்களின் நம்பகத்தன்மையை நீங்களே கண்டு தெரிந்து கொள்ளுங்கள்
Saturday, May 14, 2011 |
Posted by
உடன்பிறப்பு
at
7:38 PM
2
comments
Links to this post
Labels: ஈழம்
Sunday, March 13, 2011 |
Posted by
உடன்பிறப்பு
at
5:28 PM
0
comments
Links to this post
Labels: பிரியாணி
சாதிச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அரசுக்குக் கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு என தமிழக அரசால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் ஆனந்த விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்காக தெரு வில் நின்று பொதுமக்கள் போராட்டம் நடத்தும் அதிசயம், உமாசங்கர் விஷயத்தில்தான் நடந்திருக்கிறது.
சென்னையின் அரங்குகளிலும் நெல்லையின் தெருக்களிலும் நின்று 'உமாசங்கரைப் பணியில் சேர்த்துக்கொள்' என்று மக்கள் கோரிக்கைவைக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம் ஆனது?
"ஆண்டவன் ஒருவனை நம்பியே களத்தில் நிற்கிறேன். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்தும் முகம் தெரியாதவர்கள்கூட தொலைபேசி வாயிலாகவும், இ-மெயில் மூலமாகவும் வார்த்தைகளிலும் எழுத்திலும் நம்பிக்கையை விதைக்கிறார்கள். முன் எப்போதையும்விட, என் வீடு இப்போது மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து காணப்படுகிறது.
முதல்வருக்கு நன்றி!" - தெளிவாகப் பேசுகிறார் உமாசங்கர். தமிழகத்தின் பிரபலமான ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக இருந்த உமாசங்கரைப் பணியிடை நீக்கம் செய்திருக்கிறது அரசு.
"20 வயதிலேயே அரசுப் பணிக்கு வந்தவன் நான். வங்கிப் பணியில் இருந்துகொண்டே சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, 26-வது வயதில் ஐ.ஏ.எஸ்., ஆனேன். முதலில் வேலூரில் ஒரு வருடம் உதவி கலெக்டர். பிறகு மயிலாடுதுறை, மதுரை, திருவாரூர் என வெவ்வேறு ஊர்களிலும், துறைகளிலும் பணி. பிறகு வந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வனவாசம். தி.மு.க. ஆட்சி வந்ததும் எல்காட் எம்.டி. பணி. அதன் பிறகு, தமிழ்நாடு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் பணி. அங்கிருந்து வேறு பணிக்கு திடீரென மாற்றப்பட்டேன். வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் என்னை விசாரிக்க... நான் நீதிமன்றப் படியேற... பணி நீக்கம் செய்யப்பட்டு இப்போது வீட்டில் உள்ளேன்."
"உங்களை தலித் ஆதரவு அதிகாரி என்று கூறுகிறார்களே?"
"இன்னும் சிலர் கம்யூனிஸ்ட் என்பார்கள். தீவிரமாக மக்கள் பணி செய்வதால், சிலர் 'தீவிரவாதி' என்றார்கள். நான் எங்கு பணியில் இருந்தாலும், நிலமற்ற ஏழை விவசாயிகள் பெருமளவில் என்னைச் சந்திப்பார்கள். அவர்களில் 90 சதவிகிதம் பேர் தலித்துகள். தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் என்பதால், அவர்களின் வலியை என்னைவிட வேறு யார் உணர்ந்துகொள்ள முடியும்? என் அலுவலகம், வீடு இரண்டின் கதவும் அவர்களுக்காக எப்போதுமே திறந்தே இருக்கும். இதனால்தானோ என்னவோ, எனக்குக் குறைவான நண்பர்களே உள்ளனர். 20 ஆண்டுகள் பணி முடித்துவிட்டேன். மீதம் உள்ள 15 ஆண்டுகளையும் பாதி அரசுப் பணி, மீதி மக்கள் பணி என்று வடிவமைத்துக்கொள்வதாகத் திட்டம் இருக்கிறது."
"உங்களை எதிரியாக நினைத்த ஜெயலலிதாவே உங்களுக்கு ஆதரவாக அறிக்கைவிடும் அளவுக்கு வந்திருக்கிறாரே?"
"பணியிடை நீக்கம் செய்யப்பட்டதும், 'உங்களுக்காகக் களம் இறங்குகிறோம்' என்று பல தரப்புகளில் இருந்தும் ஆதரவு அலை. 'வேண்டாம். அரசியல் சாயம் பூசுவார்கள். நான் அரசியல் சார்பற்ற அதிகாரியாகவே தொடர விரும்புகிறேன்' என்றேன். ஆனால், நெருக்கடி முற்ற முற்ற... அவர் களே களத்துக்கு வந்துவிட்டார்கள். தேவேந்திரகுல வேளாளர் உட்பட பல்வேறு அமைப்புகள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கம்யூனிஸ்ட் தோழர்கள், வைகோ, டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருகிறார்கள். ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசுவார்... அறிக்கைவிடுவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. 'பலவான்களை உனக்காக இறங்கிப் பேசவைப்பேன்' என்கிறது பைபிள். அது தான் இன்று நடக்கிறது!"
"கருணாநிதியின் செல்லப் பிள்ளையாக இருந்தீர்கள். உங்களுக்குள் பிணக்கு வர என்ன காரணம்?"
"நான் யாருக்கும் செல்லப் பிள்ளை கிடையாது. என்றுமே மக்களுக்காக செயல்படும் பிள்ளையாகத்தான் இருந்து வருகிறேன். கோப்புகள் அனைத்திலும் கேள்வி கேட்காமல் கையெழுத்திடும் அதிகாரிகளையே அரசியல்வாதிகள் விரும்புகிறார்கள். ஆனால், இன்று துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே துணிச்சலாகக் கேள்வி கேட்டு, சாதக பாதகங்களை விளக்கிச் சொல்லும் சில அதிகாரிகளைத் தனக்குக் கீழ் வைத்திருக்கிறார்."
"அ.தி.மு.க. ஆட்சி வனவாசம் என்கிறீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும்
உங்களுக்கு நல்ல பதவிகள்தானே கொடுக்கப்பட்டன?"
"தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் என்னை அழைத்த முதல்வர், 'எங்கேய்யா போறே?' என்றார். கம்ப்யூட்டரில் ஆர்வம் என்ப தால் 'எல்காட்' என்றேன். ஓ.கே. என்றார். அந்தச் சமயத்தில்தான் இலவச கலர் டி.வி. திட்டம் நடைமுறைக்கு வந்தது. பலரும் பதறிஅடித்துப் பின்வாங்கிய அந்தத் திட்டத்தை நான் கையில் எடுத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தினேன். எல்காட்டின் துணை நிறுவனமான 'எல்நெட்', டைடல் பார்க் அருகில் உள்ளது. இந்த நிறுவனம் 'ஈ.டி.எல். இன்ஃப் ராஸ்ட்ரக்சர்' என்ற துணை நிறு வனத்தைத் தொடங்கியது.
இதற்காக 25 ஏக்கர் பள்ளிக்கரணையில் இடம் வாங்கப்பட்டது. ஆனால், நாளடைவில் அந்த கம்பெனியே காணாமல் போனது. அந்த முறைகேடுகளை விசாரிக்கப் போனபோது, கோப்புகள் காணாமல் போய்விட்டதாகச் சொன்னார்கள். நானே அமர்ந்து தேடி, கிடைத்த கோப்புகளை வைத்து ஆய்வு செய்யச் சென்றேன். நான் அங்கு சென்ற சில நிமிடங் களிலேயே 'உங்களை மாற்றி விட்டார்கள்' என்று தகவல் வந் தது. ஆனால், முறைகேடுகள்பற்றி தெளிவான அறிக்கையை, முதல்வர், தலைமைச் செயலர், எல்காட் போர்டு ஆகியோருக்கு அனுப்பினேன். இவை அனைத்தையும் சென்னை உயர்நீதி மன்றம், மத்திய தீர்ப்பாயத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்ற நட வடிக்கையில் இருப்பதால் பிர மாணப் பத்திரத்தில் குறிப்பிட் டுள்ளதைத் தவிர வேறு எதையும் தெரிவிக்க விரும்பவில்லை!"
"லஞ்ச ஒழிப்பு குற்ற விசாரணை உங்கள் மீது தொடர்கிறதா?"
"வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக விசாரிக் கிறார்கள். உடனடியாக என் மீது வழக்கு பதிவு செய்து, என்னைக் கைது செய்யுங்கள் என்றுதான் நீதிமன்றத்தில் என் வழக்கறிஞர் வாதாடினார். ஆனால், அதை செய்யத் தயங்குகிறார்கள். ஏன் என்றால், என்னுடைய கணக்கு வழக்குகள் அனைத்தும் தெளிவாக உள்ளன. ஓர் அரசு ஊழியன் 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் எது வாங்கினாலும் அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்பது விதி. கம்ப்யூட்டர், செல்போன், கார் என்று எது வாங்கினாலும் உடனடியாகத் தெரியப்படுத்தி வருகிறேன்.
அப்படி இருக்கையில் என் மீது என்னவென்று அவர்கள் எஃப். ஐ.ஆர். ஃபைல் செய்வார்கள்? இந்த வழக்கில்தான் உயர்நீதிமன்ற தடை உத்தரவு வாங்கியிருக் கிறேன். இதை எல்லாம் எஸ்.சி., எஸ்.டி. கமிஷனுக்குப் புகாராக அனுப்பினேன். அந்தக் கோபத் தில்தான் என் சாதிச் சான்றித ழைக் காரணம் காட்டி, என்னைப் பணி நீக்கம் செய்துள்ளார் முதல்வர். நான் இந்து தலித் கோட்டாவில் பணிக்குச் சேர்ந்த வன். காலப்போக்கில் நம்பிக்கையின்பால் கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் சென்றுவருகிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவனாக மாறிவிடுவேனா? மேலும், சாதிச் சான்றிதழ் தொடர்பாகக் கேள்வி எழுப்பும் அதிகாரம், மாநில அரசுக்குக் கிடையாது. யூ.பி.எஸ்.சி-க்கு மட்டுமே அதிகாரம் உண்டு."
"கருணாநிதி அரசின் சாதனை என்று எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?"
"ஓரிரு விஷயங்கள் உண்டு. சி.பி.எஸ்.சி., மெட்ரிக், ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ-இந்தியன் என்று பாடத் திட்டத்தில் இருந்த ஏற்றத்தாழ்வுகளைப் போக்கக் கொண்டுவந்த சமச்சீர் கல்வித் திட்டம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. அதேசமயம், 'நேர் நேர் தேமா... நிறை நேர் புளிமா' என்று குழப்பியடிக்கும் அளவுக்கு தமிழ்ப் பாடங்களில் இலக்கணம் தேவை இல்லை என்பது என் கருத்து. செய்யுளைக் குறைத்து உரைநடையை அதிகரித்தால், பிறகு மாணவர்களே ஆர்வமாக இலக்கணம் கற்பார்கள்."
"அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?"
"நான் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். 12 பேர்களில் ஒருவ னாகப் பிறந்தவன். மாதத்துக்கு ஒரு லட்சம் ரூபாயை வரியாகச் செலுத்தும் அளவுக்கு வருமானம் உள்ள தம்பி இருக்கிறார். தங்கைகள், வெளிநாட்டில் இன்ஜினீயர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அனுப்பிய பணத்தில் கார் வாங்கி உள்ளேன். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நேரத்தில், கார் வாங்கிய ஒரே ஐ.ஏ.எஸ்., அதிகாரி நானாகத்தான் இருப்பேன்.
இதையும் அரசிடம் தெரிவித்துவிட்டேன். என் அனுபவங்களைப் புத்தகமாக எழுத உள்ளேன். 'நாசி யில் சுவாசம் இருக்கும் மனிதர்களை நம்பாதே' என்றார் இயேசு. இனி, நானும் அப்படியே எச்சரிக்கையுடன் வாழ இருக்கிறேன்!"
நன்றி: http://www.tutyonline.net/view/52_6744/20100827184626.html
Tuesday, October 05, 2010 |
Posted by
உடன்பிறப்பு
at
3:15 PM
0
comments
Links to this post
Labels: உமா சங்கர்
Designed by Small Potato , Blogger backgrounds by Blog and Web